வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

சூர்யா - ஞானவேல் படத்தைத் தயாரிக்கும் ஹொம்பாலே!

நடிகர் சூர்யா - இயக்குநர் ஞானவேல் இணையும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே தயாரிக்கிறது.

News image

சூர்யா / ஹொம்பாலே / ஞானவேல்

Updated On :29 ஜூன் 2026, 3:23 pm IST

நடிகர் சூர்யா - இயக்குநர் ஞானவேல் இணையும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே தயாரிக்கிறது.

கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே ஃபிலிம்ஸ். கே.ஜி.எஃப், சலார், காந்தாரா என இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

ஹொம்பாலே நிறுவனம் தமிழில் நடிகர் சூர்யாவை வைத்து அடுத்தப் படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளது. கருப்பு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு விஸ்வநாதன் & சன்ஸ் படத்தில் நடித்துள்ள சூர்யா, அடுத்ததாக மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, ஹொம்பாலே நிறுவனம் தயாரிப்பில் ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

அதில், ‘இந்தத் தலைமுறையின் அச்சமற்ற நடிகர், இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய மேடையில் அடியெடுத்து வைக்கிறார்’ எனக் குறிப்பிட்டு ஹொம்பாலே நிறுவனம் பதிவிட்டுள்ளது.

சூர்யா நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இப்படம் இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

Summary

Hombale is producing the film that brings together actor Suriya and director Gnanavel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.