வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறாரா? நற்பணி மன்றம் விளக்கம்!

சூர்யா அரசியலுக்கு வருகிறாரா என்பது குறித்து நற்பணி மன்றம் அளித்த விளக்கம்.

News image

நடிகர் சூர்யா

Updated On :29 ஜூன் 2026, 4:05 pm IST

நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை அவரது நற்பணி மன்றம் திங்கள்கிழமை (ஜூன் 29) வெளியிட்டுள்ளது.

அகில இந்தியா சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொண்ட வீரமணி என்பவர், ”சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது” என்று பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாகி, சூர்யா அரசியலுக்கு வர தயாராகிக் கொண்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், இதுகுறித்து நற்பணி மன்றம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) அன்று நடைபெற்ற மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட இரா.வீரமணி 'இது என்னுடைய தனிப்பட்ட கருத்து' என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

ஆனால், அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை யாரும் நம்பவோ, பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக இரா. வீரமணி மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோல், சூர்யா அவர்களுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது.

மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் ஆர். ஏ. ராஜ் மற்றும் அமைப்பாளர் ஜி. ஹரிராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்.

எனவே, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல், மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று நற்பணி மன்றம் தெரிவித்துள்ளது.

Summary

The welfare association issued an official statement on Monday (June 29) regarding whether actor Suriya is entering politics.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.