எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இந்த மூன்றாவது மனுஷி... த்ரிஷாவைச் சாடிய பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன் நடிகை த்ரிஷா குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்...

News image
பார்த்திபன்
Updated On :10 மார்ச் 2026, 8:01 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பார்த்திபன் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த சில நாள்களுக்கு முன் திருமண நிகழ்வொன்றில் நடிகை த்ரிஷாவுடன் கலந்துகொண்டு பலருக்கும் அதிர்ச்சியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபனிடம் நடிகை த்ரிஷாவின் புகைப்படத்தைக் காட்டி, குந்தவையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டனர்.

அதற்கு பார்த்திபன், “குந்தவை வீட்டிற்குள்ளே குந்தவைத்தால் பல பிரச்னைகளைத் தீர்க்கலாம்” என்றார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதனைக் கண்டித்து த்ரிஷா, "ஒருவரிடம் மைக் இருந்தால் அவர் பேசுவது புத்திசாலித்தனமாகவோ, நகைச்சுவையாகவோ ஆகிவிடாது. அது முட்டாள் தனத்தையே வெளிப்படுத்தும். யாரைத் தரம் தாழ்ந்து பேசுகிறீர்களோ அவரை விட, பேசுபவரையே அதிகமாக வெளிச்சம் போட்டுக்காட்டும்” எனக் காட்டமாக பதிவிட்டார். இதற்காக பார்த்திபன் வருத்தம் தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதிய விடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "த்ரிஷாவுக்கு 40 வயசுக்கு மேல் ஆகிவிட்டது. நண்பர் விஜய் தமிழ்நாட்டின் அடுத்த அரசியல் சக்தியாக உருவாகியிருக்கும் சூழலில் திருமண நிகழ்வில் அவருடன் இணைந்து கலந்துகொள்ளலாமா என த்ரிஷா யோசித்திருக்க வேண்டும் என நினைத்தேன். அந்த ஆதங்கத்தில்தான் குந்தவை குந்தவைத்தால் நல்லது எனச் சொன்னேன்.

இந்த விவகாரம் குறித்து நான் வருத்தம் தெரிவித்த பிறகு த்ரிஷா ஒரு ட்வீட் போடுகிறார். அதில் நானே விரும்பி அந்த புகைப்படத்தைப் போட சொன்னதாக குறிப்பிட்டிருந்தார். இப்படி ஒரு பதிவு வரும் என்று தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன். 

இந்த பிரச்னையில் தொடர்புடைய 3 பேரை எடுத்துக்கொண்டால் முதலில் இருப்பவர் என் நண்பர் விஜய், இரண்டாவதாக அவர் மனைவி, மூன்றாவதாக அந்த மூனாவது மனுஷி... அந்த மூனாவது மனுஷியின் மூன்றாம் தர ட்வீட்டால் நான் அடைந்த பாதிப்பிற்காகவே இந்த விடியோவை வெளியிட வேண்டியாதிவிட்டது.

பலரும் நீங்கள் வருத்தம் தெரிவித்ததே தவறு என்றும் நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கணும் எனக் கூறி வருகிறார்கள். அந்த நண்பர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.