நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான மேட் இன் கொரியா திரைப்படம் புதிய டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.
நித்தம் ஒரு வானம் படத்தின் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான மேட் இன் கொரியா திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி உள்பட 12 மொழிகளில் மார்ச் 12 ஆம் தேதி வெளியானது.
தமிழ்நாட்டின் சிறிய கிராமத்தைச் சேர்ந்த நாயகியான பிரியங்கா மோகன், கொரிய கலாசாரத்தின் மீதுள்ள ஈர்ப்பால் தென் கொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி ’பீல் குட்’ பாணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.
ஓடிடி வெளியீட்டிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் உலகளவில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று தமிழின் வெற்றிகரமான நெட்பிளிக்ஸ் திரைப்படம் என்கிற பெயரைப் பெற்றுள்ளது.
மேலும், நெட்பிளிக்ஸில் உலகளவில் டாப் 10 பட்டியலிலும் 54 நாடுகளில் தொடர்ந்து டிரெண்டிங்கிலும் இடம் பிடித்து இப்படம் அசத்தியுள்ளது. பிரியங்கா மோகனின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றுள்ளதால் அவருக்கும் பெயர் சொல்லும் படமாகவே இது அமைந்துள்ளது.
priyanka mohan's made in korea movie trending on netflix listed 54 countries
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் பார்க்க வேண்டிய த்ரில்லர் படங்கள்!

ஓடிடியில் வெளியான மோகன் லால்ன் திரிஷ்யம் - 3!

மேட் இன் கொரியாவால் மகிழ்ச்சியிலிருக்கும் பிரியங்கா மோகன்!

தென் கொரியா சுற்றுலாத் துறை தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



