நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தவெகவில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

தவெகவில் இணைந்த பிரபல நடிகை குறித்து...

News image

விஜய், சாந்தினி பிரகாஷ் - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :30 மார்ச் 2026, 12:55 pm IST

நடிகர் விஜய்யின் தவெகவில் பிரபல சின்ன திரை நடிகை சாந்தினி பிரகாஷ் இணைந்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிங்கள் பசங்க என்ற நிகழ்ச்சியில் கூமாப்பட்டி தங்கப் பாண்டியன் உடன் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை சாந்தினி பிரகாஷ்.

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர். இவருக்கு சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது, சாந்தினி பிரகாஷ் பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடரில் சுகன்யா என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இரண்டாவது பாகம் அப்பா, மகன்களின் பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் சாந்தினி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுற்றும் விழி சுடரே தொடரிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில், நடிகை சாந்தினி பிரகாஷ் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணைந்துள்ளார். அதற்கான உறுப்பினர் அட்டையும் பெற்றுள்ளார்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சாந்தினி பகிர்ந்துள்ளார். இதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் நடிகர் வெங்கட் ரங்கநாதன், ‘வா தல வா வா’ என்று பதில் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Summary

Popular television actress Chandini Prakash has joined actor Vijay's TVK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.