2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

கருப்பு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!

கருப்பு படக்குழுவினருக்கு கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்தது குறித்து...

Kamal haasan

கருப்பு பட போஸ்டர், கமல் ஹாசன் - X - ஆர். ஜே. பாலாஜி, கோப்புப் படம்

Published On :

சூர்யா நடித்து வெளியாகியுள்ள கருப்பு படக்குழுவினருக்கு கமல் ஹாசன் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில், நடிகை த்ரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, ஜார்ஜ் மரியான், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படம் மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தயாரிப்பு நிறுவனம், ஜஸ்வந்த் பண்டாரி என்பவருக்கு பணம் கொடுக்க வேண்டிய பிரச்னையால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை எனக் கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, படத்தின் வெளியீட்டில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது.

இதற்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன், தனது எக்ஸ் பக்கத்தில், “தம்பி சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Kamal Haasan extended his wishes on Friday to the team behind the recently released film Karuppu, starring Suriya.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.