‘ஹிட்’ மூலம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைப் பிரதமர் அடிப்பார்! தமிழிசைதவெகவில் இணைந்த அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள்!சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை!
/

ஓடிடியில் வெளியானது தனுஷின் கர!

கர திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

News image

கர போஸ்டர் - படம்: எக்ஸ்

Updated On :28 மே 2026, 1:48 pm IST

நடிகர் தனுஷின் கர திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

போர்த்தொழில் படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ’கர’. இப்படம், ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியானது.

வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம், மமிதா பைஜூ, கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Story image

80, 90-களில் நடைபெற்ற வங்கித் திருட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவான இந்தப் படம் கலவையான விமர்சனங்ளைப் பெற்றது. உலகளவில் ரூ. 50 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 80 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதால் வணிக ரீதியாக கர திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்துக்கு தோல்விப்படமாகவே அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கர திரைப்படம் இன்று(மே 28) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், ஓடிடியில் கவனம் பெறுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Summary

Actor Dhanush's film Kara has been released on an OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.