பெத்லகேம் குடும்ப யூனிட் பட நிறுவனம் வெளியிடும் 2 புதிய படங்கள்!
பியூச்சர் ரன் அப் நிறுவனம் வெளியிடும் படங்கள் குறித்து..

பௌமா படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்
பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து, ரெஜின் எஸ். பாபுவின் மிஸ்டரி-த்ரில்லர் 'பௌமா' மற்றும் அமல் நீரதின் ஆக்ஷன்-க்ரைம் டிராமா 'டூக்ஸ்' ஆகிய படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனம் தென்னிந்திய மாநிலங்களில் விநியோகம் செய்கிறது.
'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, முன்னணி விநியோக நிறுவனமான ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தனது அடுத்த முக்கிய திரையரங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது.
அட்வஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மிஸ்டரி-த்ரில்லர் திரைப்படமான 'பௌமா' (Bouma) மற்றும் அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்-க்ரைம் டிராமா திரைப்படமான 'டூக்ஸ்' (Deux) ஆகிய இரண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் மலையாளத் திரைப்படங்களின் தென்னிந்திய திரையரங்கு விநியோக உரிமையை இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது.
ஃபியூச்சர் ரன் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அனூப் குமார் மற்றும் அருண் நாராயணன் ஆகியோர், கதைக்கு (Content-oriented) முக்கியத்துவம் அளிக்கும் தரமான திரைப்படங்களை திரைக்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
'பௌமா' திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும், 'டூக்ஸ்' திரைப்படம் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரெஜின் எஸ். பாபு எழுதி இயக்கியுள்ள 'பௌமா' திரைப்படத்தில் திலீஷ் போத்தன், சாகர் சூர்யா, வினீத் மற்றும் அதிதி பாலன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள பின்னணி இசை, இந்த த்ரில்லர் திரைப்படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பையும் மர்மத்தையும் சேர்க்கிறது.
அமல் நீரத் இயக்கியுள்ள 'டூக்ஸ்' திரைப்படம், நஸ்லென், குஞ்சாக்கோ போபன், டொவினோ தாமஸ், சௌபின் ஷாஹிர், ஷரஃபுதீன், ஸ்ரீநாத் பாசி மற்றும் ரஜிஷா விஜயன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன்-க்ரைம் கதையாக உருவாகியுள்ளது. இதற்கு உன்னி ஆர். வசனங்களை எழுத, கிறிஸ்டோ சேவியர் பாடல்களையும் பின்னணி இசையையும் அமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி, டிரெய்லர் வெளியீடு ஆகியவை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Summary
Following the success of 'Bethlehem Family Unit', Future Runup Films is distributing Regin S. Babu’s mystery-thriller 'Bouma' and Amal Neerad’s action-crime drama 'Dukes' across the states of South India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


