
ஓடிடியில் வெளியானது பெத்லகேம் குடும்ப யூனிட்!
நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் போஸ்டர்... - படம்: எக்ஸ்
நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பில் உருவான பெத்லகேம் குடும்ப யூனிட் படம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
நாயகனுக்கும் 10 வயது குறைவான நாயகிக்கும் இடையேயான காதல் கதையை மையமாகக் கொண்டு, எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர்கள் ஃபகத் ஃபாசில், இயக்குநர் திலீஷ் போத்தன் உள்ளிட்டோரின் தயாரிப்பில் உருவான இந்தப் படம், ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப் படைத்தது.
இந்த நிலையில், பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம், இன்று(அக். 2) ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது.
திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம், ஓடிடி ரசிகர்களையும் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Nivin Pauly Bethlehem kudumba unit has been released on an OTT platform and is garnering the attention of fans.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







