காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

வசூல் வேட்டை! நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் புதிய சாதனை!

நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் வசூல் குறித்து...

Bethlehem kudumba Unit

பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் போஸ்டர். - படம்: இன்ஸ்டா / ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ்.

Published On :

நடிகர் நிவின் பாலியின் நடிப்பில் வெளியான “பெத்லகேம் குடும்ப யூனிட்” திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பில் உருவான “பெத்லகேம் குடும்ப யூனிட்” படம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நாயகனுக்கும் 10 வயது குறைவான நாயகிக்கும் இடையேயான காதல் கதையை மையமாகக் கொண்டு, ஓணம் பண்டிகையையொட்டி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வெளியீட்டுக்குப் பின்பு தமிழ்நாட்டிலும் பெத்லகேம் குடும்ப யூனிட் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்தப் படம் தமிழிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகப் படக்குழு இன்று (செப். 18) அறிவித்துள்ளது.

நடிகர்கள் ஃபகத் ஃபாசில், இயக்குநர் திலீஷ் போத்தன் உள்ளிட்டோரின் தயாரிப்பில் உருவான இந்தப் படம் கேரளத்தில் இதற்கு முன்பு அதிக வசூல் செய்த படங்களான லோகா உள்ளிட்ட படங்களின் வசூலை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The film "Bethlehem Family Unit," starring actor Nivin Pauly, has grossed over ₹300 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER