திருமண பந்தத்தில் இணைந்த பாடர்கள்!

பின்னணி பாடர்கள் சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜோடிக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்.

singer

சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜோடிக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம். - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :

பின்னணி பாடர்கள் சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜோடிக்கு நேற்று (நவ. 11) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீநிஷா.

இதனைத் தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு இளையராஜா இசையமைப்பில் வெளியான அம்மா கணக்கு திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

இவர், அடி பெண்ணே, கண்ண வீசி, ஜுல்லு ஜக்கம்மா உள்ளிட்ட பாடல்களைப் பாடி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

அதேபோல, சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பாடகர் சாம் விஷால். இவர் அனிருத்தின் இசையில் மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு மொழிப் பாடலான சிட்டி ஸ்டோரி பாடலைப் பாடி சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து, அன்பறிவு படத்தில் ’கனவுகள்’ பாடலைப் பாடியிருந்தார். திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, சொந்தமாகப் பாடல்களை எழுதி, இசையமைத்து வெளியிடும் சுயாதீன பாடகராகவும் இருந்து வருகிறார் சாம் விஷால்.

சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா இருவரும் இணைந்து பல்வேறு இசைக்கச்சேரிகளில் பாடி வருகின்றனர். இவர்கள் பாடல்களைக் கேட்பதற்கென்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இவர்களின் நட்பு காதலாக மாறி, திருமணத்தில் முடிந்துள்ளது. இவர்களுக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜோடிக்கு சினிமா பிரபலங்கள், இசை ரசிகர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Summary

The engagement of playback singers Sam Vishal and Srinisha took place yesterday (Nov. 11).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER