அன்பில் அவன் ஓடிடி வெளியீட்டில் தாமதம்..! புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சோனி நிறுவனம்!
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள அன்பில் அவன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

அன்பில் அவன் படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / சோனி லைவ்
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள அன்பில் அவன் படம் முன்னதாக நவ.13ஆம் தேதி ஓடிடியில் வெளியாகுமெனக் கூறப்பட்டு வந்த நிலையில், குறிப்பிட்ட தேதியில் வெளியாகாதது சர்ச்சையானது.
இந்த நிலையில், புதிய ரிலீஸ் தேதியை சோனி லைவ் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்பில் அவன்.
ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அசோக் செல்வனின் சகோதரி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில், நடிகர்கள் கதிர் பாலு, மகா தில்லி கணேஷ், சாபமோன் அப்து சமத், ரேவதி என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்காக 70 அடி உயரத்தில் இருந்து அசோக் செல்வன் நீரில்
கடந்த அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. நவ.20ஆம் தேதி ஓடிடியில் பான் இந்திய மொழிகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Love can make you fight battles you never imagined ð¥#AnbilAvan Streaming from Nov 20 only on #SonyLIV@AshokSelvan @PreityMukundan #AnbilAvan #SonyLIV #SonyLIVTamil pic.twitter.com/lEpnmvrIY9
— Sony LIV Tamil (@SonylivTam) November 14, 2026
Summary
Delay in the OTT release of 'Anbil Avan'..! Sony announces a new release date!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


