
அன்பில் அவன் படத்தின் ப்ரோமோ பாடல் வெளியீடு!
அசோக் செல்வன் நடித்துள்ள அன்பில் அவன் படத்தின் ப்ரோமோ பாடல் வெளியானது.

ப்ரீத்தி முகுந்தன் - அசோக் செல்வன்
அசோக் செல்வன் நடித்துள்ள அன்பில் அவன் படத்தின் ப்ரோமோ பாடல் வெளியானது.
அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் ‘அன்பில் அவன்’ என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.
ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அசோக் செல்வனின் சகோதரி தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவான இப்படம் செப். 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு அக். 2 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இப்படத்திற்காக 70 அடி உயரத்தில் இருந்து அசோக் செல்வன் நீரில் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு தள விடியோ சில நாள்களுக்கு முன் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இந்த நிலையில், அன்பில் அவன் படத்தின் ப்ரோமோ பாடலான ‘ஸ்ட்ரெயிட் அவுட்டா சார்பட்டா’ பாடல் இன்று வெளியானது. தமிழ் ஆதவன் எழுதியுள்ள இப்பாடலை ராக்சேன், தமிழ் ஆதவன் இணைந்து பாடியுள்ளனர்.
Summary
Promo song for the movie Anbil Avan released
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






