லோகேஷ் கனகராஜின் மிஸ்டர் பாரத் பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
மிஸ்டர் பாரத் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து...

மிஸ்டர் பாரத் - படம் - எக்ஸ்
லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள மிஸ்டர் பாரத் படத்தின் மிஸ்டர் பாரத் பட வெளியீட்டுத் தேதி இன்று (நவ. 16) அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிருவனம் மூலம் அதயாரித்துள்ள படம் மிஸ்டர் பாரத். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நிரஞ்சன் எழுதி இயக்கியுள்ளார்.
இதில் யூடியூபர் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து சுதன் சுந்தரம், ஜகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ளார்கள். பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், படமானது வரும் டிசம்பர் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லோகேஷின் தயாரிப்பில் வெளியான முதல்படமான ஃபைட் கிளப் கலவையான விமர்சனத்தையே பெற்றதால் மிஸ்டர் பாரத் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Our very own #MrBhaarath is coming to the big screens on December 11 ð¬ð¥
— Passion Studios (@PassionStudios_) November 16, 2026
Get ready for a fun-filled ride ð#MrBhaarathFromDec11 @Bhaarath_Offl @samyukthavv @Niranjan_Dir @Dir_lokesh @Sudhans2017 @Jagadishbliss @PassionStudios @GSquadOffl @TheRoute @PradeepBoopath2@APIfilms⦠pic.twitter.com/wuzixnYQCX
Summary
The release date for the film Mr Bhaarath, produced by Lokesh Kanagaraj, has been announced today (Nov. 16).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


