நீக்கப்பட்ட காட்சிகளுடன் மறுவெளியீடாகும் ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே!
டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவான ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே படத்தின் மறுவெளியீடு குறித்து...

டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவான 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் வரும் டிச.4ஆம் தேதி மறுவெளியீடாகிறது. நீக்கப்பட்ட காட்சிகளுடன் வெளியாகவிருக்கிறது.
டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் கடந்த ஜூலை 31 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியானது.
ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளதால் இந்த இணைக்கான ரசிகர்களும் பெரிய ஆவலுடன் படத்தை பார்த்து கொண்டாடி வந்தனர்.
மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ. 23,386. 45 கோடி வசூலித்து அசத்தியது. பின்னர், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த அக். 6ஆம் தேதி வெளியானது.
தற்போது, நீக்கப்பட்ட காட்சிகளுடன் வரும் டிச.4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதனால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.
இந்தப் படத்துக்கான முன்பதிவை வரும் வியாழன்முதல் (நவ.19) உலகம் எங்கும் ரசிகர்கள் தொடங்கலாம் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக, நைட் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த ரொசாரியோ டாசன் காட்சிகள் இடம்பெறுமெனக் கூறப்பட்டுள்ளது. முந்தைய வெளியீட்டில் ரன்னிங் டைம் பிரச்னையினால் இந்தக் காட்சிகள் நீக்கப்பட்டிருந்தன.
இந்தப் படம் ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ ரிலீஸுக்கு முன்பாக வெளியாவதால் மார்வெல் சினிமாட்டிக் ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக இருக்கவிருக்கிறது.
Welcome to a brand new Brand New Day.
— Spider-Man Movie (@SpiderManMovie) November 16, 2026
â°The record-breaking movie is coming back to the big screen on December 4 with an extended cut featuring new scenes and a couple more surprises. Get tickets for the extended cut of #SpiderManBrandNewDay this Thursday. pic.twitter.com/IDM1K0FaGe
Summary
'Spider-Man: Brand New Day' returns to theatres on December 4 with extended cut
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


