அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

முன்னாள் மனைவிக்கு திருமணம் நடத்தி வைத்த ஸ்பைடர் மேன்!

ஸ்பைடர் மேன் நடிகர் டோபி மாகுயர் தனது முன்னாள் மனைவிக்குத் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

'Spider-Man' actor Tobey Maguire officiated his ex-wife's wedding.

முன்னாள் மனைவிக்கு திருமணம் நடத்தி வைத்த ஸ்பைடர் மேன் நடிகர் டோபி மாகுயர்

Published On :

ஸ்பைடர் மேன் நடிகர் டோபி மாகுயர் தனது முன்னாள் மனைவிக்குத் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

ஸ்பைடர் மேன் என்றாலே உடனடியாக ஞாபகத்திற்கு வருவது நடிகர் டோபி மாகுயர் முகம்தான். ஸ்பைடர் மேன் திரைப்படத் தொடரின் முதல் மூன்று பாகங்களில் ஸ்பைடர் மேனாக நடித்தவர் டோபி. அவருக்கு அடுத்து வேறு சில நடிகர்கள் ஸ்பைடர் மேனாக நடித்திருந்தாலும் மக்களின் மனதில் ஸ்பைடர் மேனாக நீங்காத இடம்பிடித்தவர் அவரே.

டோபி மாகுயரும் அவரது முன்னாள் மனைவி ஜெனிஃபர் மேயரும் கடந்த பத்தாண்டுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர். இவர்கள், 6 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு செப். 21 அன்று அதிகாரப்பூர்வமாக விவாகரத்துப் பெற்று இருவரும் பிரிந்தனர்.

விவாகரத்து நடைபெற்ற சில நாள்களில், அக். 10 அன்று ஜெனிஃபருக்கும் இசை நிறுவன உரிமையாளரான பிரபல தொழிலதிபர் ஜெஃப் ஒகுன்லேசிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தை ஸ்பைடர் மேன் நாயகன் டோபியே முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.

ஸ்பைடர் மேன் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ள திருமண நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதில், ஒரு புகைப்படத்தில் அவர் ஸ்பைடர் மேனின் செய்கையை நிகழ்த்தியது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

ஜெனிஃபர் மேயரும் ஜெஃப் ஒகுன்லேசியும் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த சில மாதங்களில் அவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

ஹவாயில் உள்ள தனியார் ரெசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, அவரது காதலி விட்டோரியா செரெட்டி, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், கோர்ட்னி காக்ஸ், ராப் பாடகர் யங் தக் என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

டோபி - ஜெனிஃபர் தம்பதிக்கு ரூபி ஸ்வீட்ஹார்ட் (19) என்ற மகளும், ஓடிஸ் டோபியாஸ் (17) என்ற மகனும் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்தத் திருமணத்தின்போது இருவரும் உடனிருந்தனர்.

டோபியும் ஜெனிஃபரும் பிரிவு மற்றும் விவாகரத்துக்குப் பின்னரும் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். மேலும், குழந்தைகளை இருவரும் இணைந்தே வளர்த்து வருகின்றனர்.

Summary

'Spider-Man' actor Tobey Maguire officiated his ex-wife's wedding.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.