நட்சத்திர மழை... மகளின் பெயர், புகைப்படத்தைப் பகிர்ந்த சங்கீத் பிரதாப்!
பிரேமலு படத்தின் மூலம் புகழ்பெற்ற சங்கீத் பிரதாப் பகிர்ந்த தனது முதல் குழந்தையின் பெயர், புகைப்படம் குறித்து...

சங்கீத் பிரதாப் பகிர்ந்த அவரது மகள். - படம்: இன்ஸ்டா / சங்கீத் பிரதாப்
மலையாள நடிகர் சங்கீத் பிரதாப் தனது முதல் குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் வைத்துள்ள ”நட்சத்திர மழை” எனும் பெயர் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த சங்கீத் பிரதாப் (31 வயது) எடிட்டராக தொடக்கத்தில் மலையாள சினிமாவில் அறிமுகமாகியவர். பிரேமலு படத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானார்.
கடந்த செப்டம்பரில் நாயகனாக நடித்த இவரது முதல் படம் ’இடிஸ் மெடிக்கல் மிராக்கல்’ எனும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
தற்போது, மமிதா பைஜூ உடன் இணைந்து ஹலோ டியர் எனும் புதிய படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அடுத்து அன்னா பென் உடனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு கடந்த நவ.2023ல் ஆன்சி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இவர்களுக்குப் பெண் குழந்தைப் பிறந்துள்ளது.
இந்தக் குழந்தைக்கு ’தாரா ரெய்னி’ (Taara Raine) எனப் பெயரிட்டுள்ளார்கள். அதற்கென தனியாக இன்ஸ்டா பக்கத்தையும் உருவாக்கியுள்ளார்கள். சங்கீத் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நீ நட்சத்திரத்தினால் எழுதப்பட்டு, மதிக்கத்தக்க ஒரு மழையாக எங்களுக்குக் கிடைத்துள்ளாய். நீ எங்களது சிறிய நட்சத்திரம், எங்களது இளவரசி. எங்களுக்கு நடைபெற்ற சிறந்த விஷயம் நீதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
திரைப் பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஹலோ டியர் படம் ஜன.29, 2027ல் வெளியாகவிருக்கிறது.
Summary
Premalu Sangeeth Prathap reveals his newborn's name, drops her first pictures
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


