லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்! அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

மமிதா பைஜூ - சங்கீத் பிரதாப் நடிக்கும் ஹலோ டியர்! வெளியீட்டுத் தேதி!

மமிதா பைஜூ - சங்கீத் பிரதாப் இணைந்து நடிக்கும் “ஹலோ டியர்” படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

Hello dear movie

மை டியர் பட போஸ்டர்... - Instagram

Published On :

மமிதா பைஜூ மற்றும் சங்கீத் பிரதாப் இணைந்து நடிக்கும் “ஹலோ டியர்” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேமலு படத்தில் அமல் டேவிஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் சங்கீத் பிரதாப். இவர், நடிகை மமிதா பைஜூ உடன் இணைந்து நடிக்கும் புதிய படம் “ஹலோ டியர்”.

அறிமுக இயக்குநர் டினோய் பவுலோஸ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கின்றார்.

இந்த நிலையில், “ஹலோ டியர்” திரைப்படம் வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் இன்று (அக்.9) அறிவித்துள்ளனர்.

முன்னதாக, பிரேமலு படம் மூலம் பிரபலமான மலையாள நடிகர்கள் சங்கீத் பிரதாப் மற்றும் மமிதா பைஜூ தொடர்ந்து வெற்றி படங்களைக் கொடுத்து வருகின்றனர்.

நடிகை மமிதா பைஜூ, தமிழக முதல்வர் விஜய்யின் “ஜன நாயகன்”, சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்”, பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Mamita Baiju and Sangeet Prathap starrer 'My Dear' release date announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.