கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

ஹீரோவாகி பட வெளியீட்டிற்காக மீண்டும் பிக் பாஸிற்கு வருவேன்: முகேஷ் நம்பிக்கை

திரைப்படத்தில் நாயகனாகி பட புரமோஷனுக்காக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவேன் என நடிகர் முகேஷ் தெரிவித்துள்ளார்.

bigg boss mukesh

முகேஷ் - எக்ஸ்

Updated On :

திரைப்படத்தில் நாயகனாகி பட புரமோஷனுக்காக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவேன் என நடிகர் முகேஷ் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தான் நடித்த நடுசென்டர் இணையதளத் தொடரின் புரமோஷனுக்காக வந்திருந்த நிலையில், ஹீரோவாகி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 12 வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் டிடிஎஃப் வாசன், ஜேசன், பிரித்வி, முகேஷ், ஷாதிகா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். இவர்களுக்கு இந்த வாரம் முழுக்க ரசிகர்கள் வாக்களித்தனர்.

இதில், குறைந்த வாக்குகளைப் பெற்றதாக நடிகை ஷாதிகா மற்றும் நடிகர் முகேஷ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர்.

இதில் முகேஷ் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருந்தாலும் டிடிஎஃப் வாசனின் எவிக்‌ஷன் ஃபிரீ பாஸ் மூலம் மீண்டும் போட்டியில் தொடர்ந்தார். ஆனால் தற்போது மீண்டும் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக வெளியேற்றப்பட்டுள்ளார்.

வெளியேறியபோது அவர் பேசியதாவது:

''உனக்கு வயது இருக்கிறது என்று பலர் கூறுவார்கள். ஆனால், எனக்கு இந்த இடத்தை விட்டால் வேறு இடம் கிடைக்காது. என்னை நான் நிரூபிக்க வேண்டிய இடம் இது. திருச்சியில் இருந்து தனியாகத்தான் இங்கு வந்தேன். இப்போது வரைக்கும் தனியொரு ஆளாகவே நிற்கிறேன்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் எனக்குப் பிடிக்கும். இது சிறப்பான அனுபவம். நடுசென்டர் இணையத் தொடரின் புரமோஷனுக்காக முதல்முறை பிக் பாஸ் வந்தேன். பிறகு போட்டியாளராக பிக் பாஸ் வந்தேன். அடுத்தமுறை ஹீரோவாகி அப்படத்தின் புரமோஷனுக்காக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருவேன்'' என நம்பிக்கையுடன் முகேஷ் குறிப்பிட்டார்.

Summary

I will return to Bigg Boss for the release of my film, once I become a hero: Mukesh expresses confidence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.