அருள்நிதி நடிக்கும் வேட்ட சாமி: டீசர் வெளியீடு!

அருள்நிதியின் வேட்ட சாமி பட டீசர் வெளியானது.

அருள்நிதி

Updated On :

அருள்நிதியின் வேட்ட சாமி பட டீசர் இன்று வெளியானது.

நடிகர் அருள்நிதி நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’வேட்ட சாமி’. இப்படத்தை, இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்கியுள்ளார்.

நடிகர்கள் அமீர், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கோவில் மற்றும் சாமியாடுதலை மையமாகக் கொண்டு கதைக்களத்தில் ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. வேட்ட சாமி திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி - 3 திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவிருந்த நிலையில் அந்தப் படத்தின் வெளியீடு பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இப்படம் வெளியாகின்றது.

Summary

The teaser for Arulnithi's film 'Vetta Saami' was released today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.