சூப்பர்ஹீரோ கதையை எழுதுவது கடினம்... திரைப்பட விழாவில் பாசில் ஜோசப்!

இந்திய திரைப்பட விழாவில் இயக்குநர் பாசில் ஜோசப் சூப்பர்ஹீரோ படங்கள் பற்றி கூறியிருப்பதாவது...

A scene from the film 'Minnal Murali', with Basil Joseph at a film festival

மின்னல் முரளி படக் காட்சி, திரைப்பட விழாவில் பாசில் ஜோசப் - படங்கள்: பாசில் ஜோசப், பிஐபி இந்தியா

Updated On :

கோவாவில் நடைபெற்றுவரும் இந்திய திரைப்பட விழாவில் இயக்குநர் பாசில் ஜோசப் சூப்பர்ஹீரோ படங்கள் பற்றி பேசும்போது, “ஏற்கெனவே நமது கதாநாயகர்கள் சூப்பர்ஹியூமன்களாக (மனிதனுக்கு அப்பாற்பட்டவர்கள்) இருப்பதால், சூப்பர்ஹூரோ கதைக்கு அதிகமாக மெனக்கெட வேண்டியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் மின்னல் முரளி திரைப்படம் 2021ல் வெளியானது. இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், ஃபெமினா ஜார்ஜ், குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

நேரடியாக ஓடிடியில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலக அளவிலேயே இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது பாசில் ஜோசப் நாயகனாக பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் அதிரடி படம் வெளியானது. இந்த நிலையில், கோவா திரைப்பட விழாவில் கலந்துகொண்டார்.

இந்த விழாவின் கலந்துரையாடலில் ஹிந்தி பட இயக்குநர் அயன் முகர்ஜியுடன் பாசில் ஜோசப் கலந்துகொண்டார். அந்த விழாவில் பாசில் ஜோசப் பேசியிருப்பதாவது.

முன்பிருந்தே நமது இந்திய திரைப்படங்களில் கதாநாயகர்களின் கதாபாத்திரங்களுக்கு நம்பமுடியாத திறமைகளும் சூப்பர்ஹியூமன் ஆற்றல்களும் இருப்பதாக காட்டப்பட்டு வருகின்றன. அதனால், சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தை உருவாக்கும்போது வழக்கமான நாயக பிம்பம் இல்லாமல் உருவாக்குவது கடினமாக இருந்தது.

பட்ஜெட் குறைவாக இருந்ததால் அதற்கேற்ப புதிய புதிய யுக்திகளை சிந்திக்க வேண்டியிருந்தது. முகத்தை லுங்கியால் மூடிக்கொண்டும் செருப்புடன் வருவது எல்லாம் பட்ஜெட் குறைவாக இருந்ததால் கிடைத்த யோசனைதான் என்றார்.

அடுத்ததாக அல்லு அர்ஜுன் படத்தில் பாசில் ஜோசப் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ”மின்னல் முரளி முதல் பாகம் இயற்கையாக நடந்தது. இதன் இரண்டாம் பாகத்துக்கு நாங்கள் எதையும் பலவந்தமாக முயற்சிக்கவில்லை. நடக்க வேண்டுமென இருந்தால் அது கண்டிப்பாக நடக்கும். நல்ல திரைக்கதைக்காக காத்திருக்கிறேம்” என முன்னதாக டொவினோ தெரிவித்திருந்தார்.

Summary

Basil Joseph on the challenges of making an Indian superhero: 'Our protagonists are superhumans'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.