தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை: திமுக தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் - இந்திய கம்யூ.தொகுதி மறுவரையறை மசோதா: மு. க. ஸ்டாலினை சந்திக்கும் சோனியா, கார்கே?தொகுதி மறுவரையறை: மு.க. ஸ்டாலினை சந்திக்கும் மமதா பானர்ஜி!திருப்பரங்குன்றம்: உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி!நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரை

ராமாயணா அனிமேஷன் திரைப்படத்தை இயக்கும் அனில் ரவிபுடி!

அனிமேஷன் திரைப்படத்தை இயக்கும் அனில் ரவிபுடி

இயக்குநர் அனில் ரவிபுடி

Updated On :

இயக்குநர் அனில் ரவிபுடி ராமாயணா அனிமேஷன் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

தெலுங்கில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து கவனிக்கப்படுபவர் இயக்குநர் அனில் ரவிபுடி. ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தி வெளியீடாகத் தன் திரைப்படத்தைக் கொண்டு வருவதால் அந்த பண்டிகையின் இயக்குநர் என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

இறுதியாக, இவர் இயக்கிய பகவந்த் கேசரி, சங்கராந்தி வஸ்துனம் (2025 -ஜனவரி வெளியீடு), மன ஷங்கர வர பிரசாத் காரு (2026 - ஜனவரி வெளியீடு) ஆகிய திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிகளைப் பெற்றன.

அதேபோல், இந்த முறை நடிகர்கள் வெங்கடேஷ், கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி உள்ளிட்டோரை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், ராமாயணா கதையை அனில் ரவிபுடி அனிமேஷன் திரைப்படமாக உருவாக்க உள்ளாராம். கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. விஷ்ணுவின் அவதாரங்களை ஹொம்பாலே பிலிம்ஸ் அனிமேஷனாக எடுத்துவரும் சூழலில் கேவிஎன் நிறுவனம் ராமாயண கதையை அனிமேஷன் ஆக தயாரிப்பதற்கான திட்டத்தில் உள்ளது.

Director Anil Ravipudi is set to direct an animated film based on the Ramayana.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.