கென்னின் இரண்டு திரைப்படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?
கென் நடிக்கும் திரைப்படங்களுக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்...

நடிகர் கென், இசையமைப்பாளர் சாய் அபயங்கர்
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நடிகர் கென் நடிக்கும் இரண்டு திரைப்படங்களுக்கு இசையமைக்க உள்ளாராம்.
நடிகர் கருணாஸின் மகனாக கென், யூத் திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகி பெரிய வெற்றியைப் பெற்றார். நல்ல நடிப்பு திறன் கொண்ட நடிகர் என்பதால் இயக்குநர் வெற்றி மாறன் தான் இயக்கிவரும் ராஜன் வகையறாவில் கென்னை நாயகனாக நடிக்க வைத்துள்ளார். இதன், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அடுத்ததாக, கென் நடிக்கும் திரைப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்குகிறார். இவர் கட்டா குஸ்தி 1 மற்றும் 2 ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ராஜன் வகையறா மற்றும் செல்லா அய்யாவுடனான திரைப்படத்தில் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்ற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் கென்னும் சாய்யும் மறைமுகமாக பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.
Music composer Sai Abhyankar is set to compose music for two films starring actor Ken.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


