9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

நன்றி இ(சாய்)சை... சாய் அபயங்கருக்குப் பதிலளித்த சூர்யா!

நடிகர் சூர்யா இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு அளித்த பதில் குறித்து...

Sai Abhyankar, Surya

சாய் அபயங்கர், சூர்யா - படங்கள்: இன்ஸ்டா / சாய் அபயங்கர், சூர்யா

Updated On :

நடிகர் சூர்யா இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு அளித்த பதிலில், “நன்றி சாய் (இசை)” என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவ. 6 அன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நல்ல வரவேற்பைப் பெறும் இந்தப் படம்  5ஆவது நாள் வசூலாக உலக அளவில் ரூ. 205 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலரும் நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், இசையமைப்பாளர் சாய் அபயங்கரும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சாய் அபயங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒருவரின் மாஸான சீன் படத்தைப் பார்த்தேன். அது சிறப்பாக இருந்தது. ஜித்து மாதவன் சகோதரர் அசத்திவிட்டார். அண்ணன் சூர்யாதான் எப்போதும் தி ஒன். ஃபயர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் பகிர்ந்த நடிகர் சூர்யா, “இசை (சாய்) நன்றி” எனக் கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் ரசிகர்கள் சாய் அபயங்கரை ஆங்கிலத்த்தில் ஓர் எழுத்தைச் சேர்த்து ‘இசை அபயங்கர்’ என்று அழைத்து வருகிறார்கள். இதனைப் போலவே சூர்யாவும் கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

கருப்பு திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் வெற்றிக்கு சாய் அபயங்கரின் இசை முக்கிய பங்காற்றியதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Thank you, issai... Suriya responds to Sai Abhyankar!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER