
ஓடிடியில் வெளியான கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படம்!
கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியிருப்பது தொடர்பாக...

சர்தார் 2 போஸ்டர். - படம்: எக்ஸ்
நடிகர் கார்த்தி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள சர்தார் - 2 திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து, மீண்டும் இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்ட சர்தார் - 2 படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாகவும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய் எண்டர்டெயின்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. சாம் சி எஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இயக்குநர் பி.எஸ். மித்ரனுடன் இணைந்து நம்பி திரைக்கதை எழுதியுள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
இந்தப் படம் கடந்த செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், கலவையான விமர்சனங்களையே பெற்ற இப்படம், ரூ. 25 கோடி மட்டுமே வசூல் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சர்தார் - 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் ஓடிடி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Summary
The movie Sardar 2, starring actor Karthi in the lead role, has been released on an OTT platform.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







