மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்மதுரையில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்!பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து! மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு

கார்த்தியின் சர்தார் - 2 ஓடிடி வெளியீட்டுத் தேதி!

கார்த்தியின் சர்தார் - 2 ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Poster of the movie Sardar 2

சர்தார் 2 படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / பிரின்ஸ் பிக்சர்ஸ்

Published On :

நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து, மீண்டும் இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்ட சர்தார் - 2 படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாகவும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், கலவையான விமர்சனங்களையே பெற்ற இப்படம், ரூ. 25 கோடி மட்டுமே வசூல் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய் எண்டர்டெயின்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. சாம் சி எஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இயக்குநர் பி.எஸ். மித்ரனுடன் இணைந்து நம்பி திரைக்கதை எழுதியுள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

இந்த நிலையில், சர்தார் - 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் அக். 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

Summary

Information regarding the OTT release of actor Karthi's film Sardar 2 has come to light.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.