
முதல் நாளில் கார்த்தியின் வசூலைத் தாண்டிய சூரி!
மண்டாடி, சர்தார் - 2 திரைப்படங்களின் முதல் நாள் வசூல்...

நடிகர்கள் சூரி, கார்த்தி.
சர்தார் - 2, மண்டாடி திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூரியின் மண்டாடி மற்றும் நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படங்கள் நேற்று (செப். 10) திரையரங்குகளில் வெளியானது. இதில், சர்தார் - 2 கலவையான விமர்சனங்களையும் மண்டாடி நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளன. இதனால், மண்டாடி திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சேர்த்து மண்டாடி திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 4.70 கோடியையும் சர்தார் - 2 ரூ. 4.50 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்தார் முதல் பாகம் ஹிட் அடித்ததால் இரண்டாம் பாகம் மீது எதிர்பார்ப்பு இருந்தது. மேலும், நடிகர்கள் கார்த்தி, எஸ்ஜே சூர்யா, மாளவிகா மோகனன் என பெரிய பட்டாளமே இருந்தனர். ஆனாலும் சூரியின் திரைப்படத்திற்கே அதிக டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரியின் திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிகம் வசூலித்த திரைப்படமாகவும் மண்டாடி மாறியுள்ளது.
நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படம் ரூ. 90 கோடிக்கும் அதிகமான பொருள்செலவில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Information regarding the first-day box office collections of the movies Sardar 2 and Mandadi has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






