
சர்தார் - 2, மண்டாடி திரைப்படங்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் மந்தம்!
சர்தார் - 2, மண்டாடி டிக்கெட் முன்பதிவுகளில் தொய்வான நிலவரமே உள்ளது...

நடிகர்கள் கார்த்தி, சூரி
சர்தார் - 2, மண்டாடி திரைப்படங்களுக்கான டிக்கெட் முன்பதிவுகளில் மந்தம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் சூரி நடிப்பில் உருவான மண்டாடியும் நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படமும் நாளை (செப். 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. இரண்டு திரைப்படங்களின் மீது எதிர்பார்ப்பு இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இதில், சென்னை - செங்கல்பட்டு பகுதிகளில் சர்தார் - 2 திரைப்படத்திற்கு அதிக திரைகள் ஒதுக்கப்பட்டாலும் திரையரங்க எண்ணிக்கையில் மண்டாடியே முன்னிலையில் உள்ளது. மேலும், மதுரையில் மண்டாடிக்கு அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோவை, திருப்பூர் பகுதிகளில் இரு திரைப்படத்திற்கும் இதுவரை இணையான திரைகளே ஆன்லைனில் காட்டுகின்றன. முன்பதிவு தளங்களில் இல்லாத திரையரங்களிலும் இதே நிலவரமே இருக்கும் எனத் தெரிகிறது. மேலும், பல பகுதிகளிலும் அகலத் திரைகளில் மண்டாடிக்கே காட்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடலோர மாவட்டங்களிலும் மண்டாடியைக் காண ஆர்வம் இருக்கும் என்பதால் அப்பகுதிகளில் இப்படத்திற்கு கூடுதலாகத் திரைகள் வழங்கப்படலாம். அதே நேரம், நடிகர் கார்த்திக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் சர்தார் - 2 ஹைதராபாத்தில் அதிக திரைகளில் வெளியாகிறது. மண்டாடியில் பிரபல தெலுங்கு நடிகர் சுஹாஸ் நடித்திருந்தாலும் திரை எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
இந்த நிலையில், நாளை வெளியாகவுள்ள இத்திரைப்படங்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் மந்தமாகவே உள்ளன. சென்னையில் பிரபல திரையரங்குகளில் பாதி டிக்கெட்கள்கூட விற்கப்படவில்லை. வியாழக்கிழமை வெளியாவதால் பணிக்குச் செல்பவர்கள் வர முடியாத சூழல் காரணமாகவும் இந்தத் தொய்வு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இரண்டு திரைப்படங்களின் வெற்றி வாய்ப்பைப் பொறுத்தே அடுத்தடுத்த நாள்களில் டிக்கெட் விற்பனைகள் நடைபெறும் என்பதால் இரண்டு திரைப்படத் தயாரிப்பாளர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Ticket bookings for the movies Sardar 2 and Mandaadi have been sluggish.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






