பிக் பாஸ் 10: கண்ணில் காயமடைந்த ஷாதிகா! கரீஷ்மாவுக்கு கால் முறிவு!

காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்து பிக் பாஸுக்கு வந்த கரீஷ்மாவுக்கு காலில் பலத்த காயம்...

Bigg boss 10 tamil Shadhika suffers

காயத்துடன் ஷாதிகா, அருகில் அக்‌ஷிதா - எக்ஸ்

Published On :

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியின்போது நடிகை ஷாதிகாவுக்கு கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்து பிக் பாஸுக்கு வந்த கரீஷ்மாவுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான ஆளும் அணி தலைவராக அக்‌ஷிதா தேர்வாகியுள்ளார். எதிரணி தலைவராக முனியம்மா பொறுப்பேற்றுள்ளார்.

இந்த வாரம் முழுக்க உயிரைக் காக்கும் போட்டி பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் இரண்டு பேர் சேர்ந்து ஒரு அணியாக மாற வேண்டும்.

ஒவ்வொரு அணிக்கும் 10 உயிர்கள் கொடுக்கப்படும். போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உயிரை தற்காத்து விளையாட வேண்டும். இறுதிவரை யார் அதிக உயிர்களுடன் இருக்கின்றனரோ அவரே இந்த வார போட்டியின் வெற்றியாளர்.

அடாவடி அன்சர் - ஷாதிகா அணியாக உள்ளனர். ஜேசன் கெளசிக் - முகேஷ் அணியாக விளையாடுகின்றனர். இதுமட்டுமின்றி முனியம்மா - முத்தழகி, அக்‌ஷிதா - அவினாஷ், வாசன் - அஸ்மிதா என ஒருவருடன் மற்றொருவர் சேர்ந்து ஒரு அணியாக விளையாடி வருகின்றனர்.

இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் மிகவும் ஆக்ரோஷத்துடன் விளையாடி வருகின்றனர். குறிப்பாக ஒரு அணியைத் தோற்கடிப்பதற்காக மற்ற அணியுடன் கூட்டணி சேர்ந்து விளையாடி வருகின்றனர்.

போட்டியாளர்களிடையே உள்ள ஆக்ரோஷத்தின் விளைவாக பிக் பாஸ் வீட்டில் பலர் காயம் அடைந்துள்ளனர். நடிகை ஷாதிகாவுக்கு கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

கரீஷ்மாவுக்கு உதவும் டிடிஎஃப் வாசன்

கரீஷ்மாவுக்கு உதவும் டிடிஎஃப் வாசன்

சாந்தினி மயக்கம் அடைந்து விழுந்தார். அவரை சக போட்டியாளர்கள் அவசர சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றனர்.

தனது அணியின் உயிரைக் காத்து விளையாடிவந்த கரீஷ்மாவுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள முதலுதவி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முதலுதவிக்கு அழைத்துச் செல்லப்படும் கரீஷ்மா

முதலுதவிக்கு அழைத்துச் செல்லப்படும் கரீஷ்மா

வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான போட்டி வைக்கப்படுவதாகவும் இதனால் காயங்கள் ஏற்படுவதாகவும் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே, வாக்குகளில் ஷமாவும், சாந்தினியும் கடைசி இடத்தில் இருப்பதால் இந்த வார இறுதியில், இவர்களில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Summary

Bigg boss 10 tamil Shadhika suffers an eye injury Karishma leg breaks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER