முதல்வர் விஜய் இருக்கிறார்; கவலையில்லை! முதியோர் இல்லத்தில் பேசிய நடிகர் விஜயகுமார்!
முதல்வர் விஜய் குறித்து நடிகர் விஜயகுமார் பேசியது தொடர்பாக...

லொள்ளுசபா சாமிநாதன், நாராயணன், விஜயகுமார், வடிவுக்கரசி, தயாரிப்பாளரின் குடும்பத்தினர்
முதல்வர் விஜய் இருக்கிறார்; இளைஞர்கள் முதல் முதியோர் வரை யாரும் கவலைகொள்ளத் தேவையில்லை என நடிகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
சின்ன திரை தொடர்களின் தயாரிப்பாளர் நாராயணன், தனது தாயார் மோகனாவின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தயாரின் படத்தை திறந்துவைத்து அன்னதானம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜயகுமார், வடிவுக்கரசி, வையாபுரி, லொள்ளுசபா சாமிநாதன், ஆல்யா மானசா, வித்யா மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கார்த்திகை தீபம் தொடரின் நாயகன் கார்த்திக், முதியோர்களுக்கு உணவு உபசரித்து அவர்களிடம் ஆசிபெற்று மகிழ்ந்தார்.

நடிகர் கார்த்திக் / உணவு உபசரிக்கும்போது...
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார், தயார் மோகனாவின் படத்தை திறந்துவைத்து பேசியதாவது:
''தயாரிப்பாளர் நாராயணனின் மறைந்த தாயார் படத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. அவரின் தந்தையாரும் இங்கு இருக்கிறார். அவர் நலமுடன் இருக்க வேண்டும்.
முதியோர் இல்லத்துக்கு ஆதரவற்றோர் இல்லம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; ஆதரவு உள்ளவர்கள். நீங்கள் நூறாண்டுகாலம் நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.
தாய்மாமன் சீர் எனப் பல திட்டங்கள் மூலம் முதல்வர் விஜய், மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளார். தமிழக முதல்வர் இருப்பதால், இளைஞர்கள் முதல் முதியோர் வரை யாரும் கவலைப்பட வேண்டாம். நாம் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே முக்கியம்'' எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

கார்த்திகை தீபம், பாரிஜாதம் ஆகிய தொடர்கள் நாராயணன் தயாரிப்பில் ஒளிபரப்பாகி வருகின்றன. இதுமட்டுமின்றி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற பூவே பூச்சூடவா, இரட்டை ரோஜா, மாரி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி போன்ற தொடர்களையும் இவர் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Chief Minister Vijay is here don't worry Actor Vijayakumar spoke at the old age home
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



