
விஜய் சேதுபதி பட வசனத்தைப் பேசி வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!
தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டு வாக்குசேகரித்த முதல்வர் விஜய், நடிகர் விஜய் சேதுபதி படத்தின் வசனத்தைப் பேசிக்காட்டி அதிமுகவினரை விமர்சித்தார்.

முதல்வர் விஜய் - படம் - தவெக
தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டு வாக்குசேகரித்த முதல்வர் விஜய், நடிகர் விஜய் சேதுபதி படத்தின் வசனத்தைப் பேசிக்காட்டி அதிமுகவினரை விமர்சித்தார். சட்டப்பேரவை நிகழ்வுகளில் திமுகவுக்கு அதிமுக ஆதரவாகவே செயல்படுகிறது எனக் குறிப்பிட்டார்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில், விஜய் சேதுபதி படத்தை மேற்கோள்காட்டி அதிமுக, திமுகவை விமர்சித்து முதல்வர் விஜய் பேசியதாவது:
''திமுகவினருக்கு மறதி அதிகம். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை வேட்பாளர்களாக நிறுத்தி மன்னர்களை வெற்றி பெற்றுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் கூறினார். பொதுச்செயலாளருக்கு தலைமையுடன் என்ன பிரச்னையோ? அதை அவர் பார்த்துக்கொள்ளட்டும்.
திமுக தலைவரும் மறதியில் ஒரு உண்மையை போட்டு உடைக்கிறார். கொளத்தூர் மக்கள் எங்களுக்கு வாக்களிக்காததற்கு கோடான கோடி நன்றி எனக் கூறுகிறார். இனி அடுத்தடுத்த தேர்தலிலும் மக்கள் நமக்கு வாக்களிக்கவில்லை; மக்களுக்கு கோடான கோடி நன்றி எனக் கூறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
படப்பிடிப்புக்குச் சென்றுதான் நடிப்பார்கள். ஆனால் மேடையிலேயே நடித்து, நடித்து திமுக தலைவருக்கு பழக்கமாகிவிட்டது.
நாம் அவரை உறவாக அழைத்தால், அவர் நம்மை அவன், இவன் என்று ஒருமையில் அழைக்கிறார். எந்த அளவுக்கு எங்களை தரம் தாழ்த்திப் பேசுகிறீர்களோ, அந்த அளவுக்கு மக்கள் எங்களை உயரத்தில் ஏற்றி வைப்பார்கள்.
மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம் என்று அடிக்கடி கூறுவார் மு.க. ஸ்டாலின். இடைத் தேர்தலிலும் அப்படி ஒரு அறிக்கையை நிச்சயம் விடுவார்.
ஜெயலலிதா இருக்கும் வரை சர்க்காரியா அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் பேசியுள்ளனர். அதையே நான் பேசினால் எதிர்க்கிறது அதிமுக. திமுக கோவப்படுவதில் ஒரு அர்த்தம் உள்ளது. ஆனால், அதிமுக ஏன் கோவப்படுகிறது என்று தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் பேசியதைத்தானே நான் பேசினேன்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் வருவதைப்போன்று ''என்னாச்சு.... என்னாச்சு...'' என்று பேசி திமுகவுக்கு முட்டு கொடுக்கிறது அதிமுக.
எம்.ஜி.ஆர். போன்று, ஜெயலலிதா போன்று தில்லாக திமுகவை எதிர்ப்பது விஜய் மட்டும்தான். இது அதிமுக தொண்டர்களுக்கு தெரியும்.
2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்பியதை மறந்து அதிகாரத்தில் இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள்'' என விஜய் பேசினார்.
Summary
dharapuram campaign Chief Minister Vijay canvassed for votes by delivering a dialogue from a Vijay Sethupathi movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







