மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சாலை வலம்!
மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சாலை வலம் மேற்கொண்டு வருகிறார்....

மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சாலை வலம் - TVK
மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி பிரசார பொதுக் கூட்டத்திற்கு செல்லும் வழியில், பிரசார வாகனத்தில் முதல்வர் விஜய் சாலை வலம் மேற்கொண்டு வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தவெக சார்பில் முதல்வர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக ஆத்தூா் சுங்கச்சாவடி அருகே 5,000 போ் அமரும் வகையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதியம் 3 மணியளவில் முதல்வர் விஜய் பிரசாரத்தைத் தொடங்கும்நிலையில், பிராசாரத்தில் பொதுமக்களுக்கான அனைத்து அடிப்படைத் தேவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி முதல்வர் விஜய் சென்னையில் இருந்து புறப்பட்டு இன்று பிற்பகல் 2 மணியளவில் மதுராந்தகம் வந்தார்.
மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து அங்கிருந்து பொதுக்கூட்ட மேடைக்கு செல்லும் வழியில் அவர் சாலைவலம் மேற்கொண்டு வருகிறார். வழிநெடுக அவருக்கு மக்கள், தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
Summary
CM vijay roadshow in madhurantakam on byelection campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




