ஹன்சிகா மோத்வானி நடிக்கும் யக்ஷிணி!
ஹன்சிகா மோத்வானியின் புதிய திரைப்படம்...

நடிகை ஹன்சிகா மோத்வானி
நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், பிரியாணி, சிங்கம் 2 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமான ஹன்சிகா, சில ஆண்டுகளாக பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்தார். இடையே, திருமணமாகி விவாகரத்தும் பெற்றார்.
இந்த நிலையில், நடிகை ஹன்சிகா தமிழில் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் புதிய ஹாரர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யக்ஷிணி எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இது, சோட்டாணிக்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் வெளியிடப்பட்டது.
மேலும், இத்திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The title of actress Hansika Motwani's new film has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


