பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!இந்தியா - போலந்து உறவை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை முயற்சிகள்: பிரதமர் மோடிஅடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர மாட்டீர்கள் ராகுல்! அமித் ஷா கடும் விமர்சனம்தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா? கனிமொழி கேள்வி!பருவமழை தீவிரம்: சென்னை எழிலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!

மருத்துவத் துறை தவறாகச் சித்திரிப்பு! சன்னி தியோல் படத்துக்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு

சன்னி தியோலின் சூர்யா-ஆன்ட் சே ஆரம்ப் தக் படத்துக்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து...

Suryaa: Ant Se Aarambh Tak
Updated On :

பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடித்துள்ள சூர்யா - ஆன்ட் சே ஆரம்ப் தக் திரைப்படம், மருத்துவத் துறையைக் களங்கப்படுத்தும் வகையில் இருப்பதாக மத்திய அமைச்சருக்கு மருத்துவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளனர்.

இயக்குநர் எம்.பத்மகுமார் இயக்கத்தில் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி கிரைம் திரில்லர் திரைப்படம், சூர்யா - ஆன்ட் சே ஆரம்ப் தக். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில், மருத்துவத் துறையில் நிகழும் அலட்சியம் மற்றும் முறைகேடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

வருகிற நவம்பர் 20 ஆம் தேதியில் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரில் மருத்துவத் துறை மீது களங்கம் சுமத்தப்படும் வகையில் இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்தப் படத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது, "மருத்துவத் துறையில் தனிப்பட்ட முறைகேடு குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். அதேவேளையில் ஒரு சிலரின் குற்றங்களால் ஒட்டுமொத்த மருத்துவத் துறையையும் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள மருத்துவர்களின் நற்பெயரையும் களங்கப்படுத்தக் கூடாது.

சூர்யா - ஆன்ட் சே ஆரம்ப் தக் திரைப்படத்தில் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மீதான தாக்குதல் காட்சிகள், அவர்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பதுபோல உள்ளது.

ஏற்கெனவே மருத்துவமனைகளில் மருத்துவர்கள், ஊழியர்கள் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், அவர்களைத் தாக்குவது போன்ற உள்ளடக்கத்தால் மேலும் ஆபத்தை ஏற்படுத்தும்.

மருத்துவத் துறையில் முறைகேடுகளை மருத்துவ சங்கம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என வலியுறுத்துகிறோம். எந்தவொரு தவறும் சட்டம் - ஒழுங்கு நடவடிக்கையால் மட்டும் தீர்க்கப்பட வேண்டும். தனிநபர்களின் தவறான நடத்தையால், ஒட்டுமொத்த துறையையும் களங்கப்படுத்தக் கூடாது.

ஆக்கபூர்வமான கருத்துச் சுதந்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் அதே வேளையில், அது பொறுப்புடனும் செயல்படுத்தப்பட வேண்டும். ஆகையால், இந்தத் திரைபடத்தின் உள்ளடக்கம் மற்றும் மருத்துவத் துறையைச் சித்திரிப்பது குறித்து நடுநிலைமையான மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

Summary

The Indian Medical Association (IMA) seeking an urgent review of the film “Suryaa– Ant Se Aarambh Tak”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.