கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

ஹிந்திக்கு துரந்தர், தமிழுக்கு அரசன்..! நடிகர் சிம்பு நம்பிக்கை!

நடிகர் சிலம்பரசன் அரசன் திரைப்படம் குறித்து பேசியிருப்பதாவது...

Dhurandhar Ranveer singh, Arasan STR.

துரந்தரில் ரன்வீர் சிங், அரசனில் சிம்பு. - படங்கள்: எக்ஸ் / ஜியோ ஸ்டூடியோஸ், வி கிரியேஷன்ஸ்.

Published On :4 செப்டம்பர் 2026, 1:05 pm IST

நடிகர் சிலம்பரசன் அரசன் திரைப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “ஹிந்தி சினிமாவுக்கு எப்படி துரந்தர் திரைப்படம் அமைந்ததோ அதுபோல் தமிழ் சினிமாவுக்கு அரசன் திரைப்படம் அமையும்” எனக் கூறியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. இது வட சென்னை உலகில் நடைபெறும் கதையாக இருக்கிறது.

வி கிரியேஷன் சார்பாக எஸ். தாணு அரசன் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். புரோமோ காட்சியில் இவரது இசைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிம்பு பேசியிருப்பதாவது:

அரசன் படத்திற்காக அனிருத் உடன் இணைந்துள்ளேன். அரசன் படம் பல்வேறு நிஜமான இடத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. வெற்றி சார் மிகவும் முழுமையை விரும்புவார்.

ஹிந்தியில் வெளியான துரந்தர் படம் எப்படி இந்தியா முழுக்க பார்த்து ரசித்தார்களோ அதுபோல அரசன் இருக்கும். துரந்தர் படம் எப்படி ஹிந்தி சினிமாக்கு பெருமையோ அதுபோல தமிழுக்கு அரசன் திரைப்படம் இருக்கும்.

அரசன் சிறிய படமல்ல. இதில் சிறிய வயதில் இருந்து பல்வேறு வயதுக்கான தோற்றத்தில் நடித்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் துரந்தர் படத்தை வெறுப்பு பிரசாரத்தை செய்யும் படமெனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Dhurandhar for Hindhi cinema Arasan for Tamil Cinema says actor Simbhu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.