
முதல்முறையாக வடசென்னை பாஷை... அரசன் அப்டேட் கொடுத்த பிரியங்கா மோகன்!
நடிகை பிரியங்கா மோகன் அரசன் குறித்து பேசியுள்ளார்...

நடிகை பிரியங்கா மோகன்
நடிகர் பிரியங்கா மோகன் அரசன் திரைப்படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசனின் அறிவிப்பு விடியோ வெளியானதிலிருந்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் ஹிட் அடித்ததால் இப்படம் எப்போது வருமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அண்மையில், இப்படத்தின் முக்கியமான சண்டைக் காட்சியையும் படமாக்கினர். மேலும், அரசனுடன் ’ராஜன் வகையறா’ படத்தின் படப்பிடிப்பையும் வெற்றி மாறன் நடத்தி வருகிறார். முதலில் ராஜன் வகையறா இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், அரசனில் நாயகியாக நடிக்கும் பிரியங்கா மோகன் விருது விழா ஒன்றில் பங்கேற்றார். நிகழ்வில் பேசியவர், “அரசன் திரைப்படத்தில் நடிப்பதை பெரிய விஷயமாகப் பார்க்கிறேன். இயக்குநர் வெற்றி மாறனை மிகவும் பிடிக்கும். நடிகர் சிலம்பரசனுடம் முதல்முறையாக நடிக்கிறேன். மேலும், முதல்முறையாக வடசென்னை பாஷையையும் பேசியுள்ளேன். அரசனில் மிகவும் வித்தியாசமான நடிகர் சிலம்பரசனைப் பார்ப்பீர்கள். அரசன் ’மேஜிக்’ அனுபவமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியங்கா மோகன் கடைசியாக நடித்த, மேட் இன் கொரியா திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Actress Priyanka Mohan has shared her experiences of acting in the movie Arasan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






