
அரசியலுக்கு வருவேனா? நடிகர் ரவி மோகன் பதில்!
அரசியல் குறித்து ரவி மோகன் பேச்சு...

நடிகர் ரவி மோகன். - படம்: எக்ஸ் / ரவி மோகன்.
நடிகர் ரவி மோகன் தன் ரசிகர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
நடிகர் ரவி மோகன் நடித்த கராத்தே பாபு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ப்ரோ கோட், பென்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடிப்பதுடன், இயக்குநராக ஆன் ஆர்டினரி மேன் (An ordinary man) என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்க, ரவி மோகனே தயாரிக்கவும் செய்கிறார்.
ரவி மோகன் இயக்கும் ஆன் ஆர்டினரி மேன் திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான, இசைப் பணிகளை கெனிஷா தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் சென்னையில் தன் ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றனர்.
அப்போது, ரசிகர் ஒருவர், “அண்ணா, கொடியைக் காட்டி குரல் கொடுங்கள். கோட்டையைப் பிடிக்க துணை வருகிறோம்” என்றார்.
இதனைக் கேட்ட ரவி மோகன், “நடிகர்கள் ரசிகர்களைச் சந்தித்தாலே அரசியலாகவே பார்க்கின்றனர். நான் இப்போது சினிமாவில்தான் கவனம் செலுத்துகிறேன். நல்லது செய்ய பதவிகள் தேவையில்லை. தேவைப்பட்டால் அதனைப் பெற்றும் செய்யலாம். தோல்விகளால்தான் நிறைய கற்றுக்கொண்டேன். ரிஸ்க் எடுக்க தயக்கம் காட்ட மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Ravi Mohan has met his fans in person and spoken with them.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






