
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் அர்ஜுன் தாஸ்!
நடிகர் அர்ஜுன் தாஸின் புதிய திரைப்படம் குறித்து...

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார்.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், மைக்கேல் திரைப்படங்களின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
ப்ரீத்தி பகதாலா (Preethi Pagadala) கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஃபேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது.

மேலும் இப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் மற்றும் POP Entertainment நிறுவனங்களின் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.
Actor Arjun Das plays the lead role in a film directed by Ranjit Jeyakodi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







