
நந்தன் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு!
சசிக்குமார் நடித்த நந்தன் படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பு வெளியானது.

நந்தன் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு
சசிக்குமார் நடித்த நந்தன் படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பு வெளியானது.
உடன்பிறப்பே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இரா.சரவணன் இயக்கத்தில், சசிக்குமார் நடிப்பில் உருவான படம் நந்தன். ஸ்ருதி பெரியசாமி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் பேசிய இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரது பாராட்டுகளை இப்படம் பெற்றது.
முதல் பாகம் வெளியாகி இன்றுடன் இரு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நந்தன் - 2 படத்தின் அறிவிப்பை இயக்குநர் இரா.சரவணன் வெளியிட்டுள்ளார்.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகவுள்ள இப்படத்தில் கதாநாயகனாக யார் நடிக்கவிருக்கிறார் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

Summary
The second part of the film Nandan starring Sasikumar has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







