
சந்தியா ராகம், வாகை சூட வா தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
சந்தியா ராகம், வாகை சூட வா தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

சந்தியா ராகம் தொடர் - படம்: விடியோ கிளிப்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம், வாகை சூட வா தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சந்தியா ராகம்
சந்தியா ராகம் தொடரில் சந்தியா ஜகர்லமுடி, அந்தாரா, விஜே தாரா, ராஜீர் பரமேஸ்வரன், சுர்ஜித் குமார் உள்ளிட்ட பலர் பிரதான பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதில் ஜானகி, சந்தியா என்னும் இரு சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளான தனலட்சுமி, மாயா என்னும் இரு சகோதரிகளின் குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2023 அக்டோபர் முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு சந்தியா ராகம் தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிலையில், சந்தியா ராகம் தொடர் நாளை(செப். 20) முதல் மாலை 6 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாகை சூட வா
நடிகர் இர்ஃபான் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் வாகை சூட வா தொடரில், பவித்ரா, குயிலி, மெட்டி ஒலி காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பொறுப்பாகப் படித்து முன்னேற நினைக்கும் நாயகிக்கும், பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் நாயகனுக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
வாகை சூட வா தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், நாளை(செப். 20) முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
கார்த்திகை தீபம் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது.
Summary
The broadcast timings for the Zee Tamil serials Sandhya Ragam and Vaagai Sooda Vaa have been changed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








