
கார்த்திகை தீபம் தொடரின் ஒளிபரப்பில் மாற்றம்!
கார்த்திகை தீபம் தொடரின் ஒளிபரப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

கார்த்திகை தீபம் தொடர் போஸ்டர். - படம்: விடியோ கிளிப்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரின் ஒளிபரப்பில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கார்த்திக் ராஜ், வைஷ்ணவி சதிஷ், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் தொடர் கார்த்திகை தீபம்.
கார்த்திகை தீபம் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தத் தொடர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் கார்த்திகை தீபம் தொடர் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.
மேலும் இந்தத் தொடரில் மீரா கிருஷ்ணா, அஷ்வந்த் திலக், விஜயகுமார், வடிவுக்கரசி, காவியா, கிருத்திகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் - 2 தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கார்த்திகை தீபம் தொடர் நாளை(செப். 21) முதல் இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தியா ராகம் தொடர் மாலை 6 மணிக்கும் வாகை சூட வா தொடர் இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது.
Summary
A change has been made to the broadcast schedule of the Karthigai Deepam serial, currently airing on Zee Tamil.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








