ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

50 ஆண்டுகால சட்டக்கல்லூரி நண்பர்களைச் சந்தித்த மம்மூட்டி!

நடிகர் மம்மூட்டி தன்னுடன் படித்த சட்டக்கல்லூரி நண்பர்களை நேரில் சந்தித்துள்ளார்...

நடிகர் மம்மூட்டி

Published On :

நடிகர் மம்மூட்டி தான் படித்த சட்டக்கல்லூரிக்குச் சென்று தன் பழைய நண்பர்களைச் சந்தித்துள்ளார்.

முகமது குட்டி பனபரம்பில் இஸ்மாயில் என்கிற மம்மூட்டிக்கு சிறுவயதில் இருந்தே நாடங்களில் நடித்த பயிற்சி இருந்ததால் தன்னுடைய முதல் படத்தில் அறிமுகமாகும் போது அவர் சட்டக் கல்லூரி மாணவர்.

1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று வெளியான 'அனுபவங்கள் பாலிச்சகல்' (உடைந்த அனுபவங்கள்) என்கிற படமே அவருடைய முதல் படம். பின் நடித்து முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் குடும்பத்தின் நெருக்கடி காரணமாக கல்லூரிப் படிப்பை முடித்தார். பின் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய பின்பே மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

தொடர்ந்து சில படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவருக்கு இயக்குநர் ஐ.வி. சசி நாயக பிம்பத்தைக் அளித்தார். இக்கூட்டணியில் உருவான த்ரிஷ்னா, அஹிம்சா படங்களின் மூலமே மம்மூட்டி நாயகனாக உருவெடுக்கிறார்.

தற்போது, மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்மூட்டி 75 வயதிலும் பேரிளம் தோற்றத்திலேயே இருக்கிறார். இதனால், ரசிகர்கள் பலரும் 75 வயது இளைஞன் என்றே செல்லமாக அழைத்தும் வருகின்றனர்.

நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த திரைப்படங்களைக் கொடுப்பதால் பலரும் மம்மூட்டியின் திரைப்படத்திற்கு காத்திருக்கின்றனர். நடிகர் தனுஷுடன் ஓம் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், மம்மூட்டி 1973 - 1976 ஆண்டு தான் படித்த எர்ணாகுளம் சட்டக்கல்லூரி வகுப்பு நண்பர்களைச் சந்தித்துள்ளார். 50 ஆண்டுகளை நிறைவு செய்த வகுப்பு என்பதால் அன்றிருந்தவர்களில் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். தன் பழைய நண்பர்களுடன் இணைந்து மம்மூட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

Actor Mammootty visited the law college where he studied and met his old friends.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER