
விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் வெளியீட்டுத் தேதி!
இரண்டு வானம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த இரண்டு வானம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் அவரை வைத்தே இயக்கிய ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.
தற்போது, மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ள திரைப்படத்திற்கு, ‘இரண்டு உலகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளனர். கொடைக்கானலில் 150 நாள்களுக்கும் மேலாக நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்திருந்தது.
இந்த நிலையில், இப்படம் அக். 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகியாக தொடர் வெற்றியைக் கொடுக்கும் மமிதா பைஜூ இப்படத்திலும் நாயகியாக நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The release date of the film Irandu Vaanam, starring actor Vishnu Vishal, has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







