பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

விபத்து ஏற்பட்டதால் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை- நடிகர் விஷால்

புருஷன் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டிருப்பது பற்றி...

Unable to attend the Actors' Association general council meeting due to an accident - Vishal

நடிகர் விஷால் - கோப்புப் படம்

Published On :

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, நாளை நடைபெறவுள்ள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஷால் வெளியிட்ட அறிக்கை: சுந்தர்.சி இயக்கும் எனது அடுத்த படமான 'புருஷன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு கோவாவில் நடை பெற்றது. பரபரப்பான சண்டைக் காட்சியின்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு முதுகில் காயமானது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையாக குணமடைய மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், நாளை நடக்க இருக்கும் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் கலத்து கொள்ள முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது. நேரில் வந்து கலந்துகொள்ள முடியாததற்கு நான் மனமார வருந்துகிறேன். எனது சூழ்நிலையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

விரைவில் குணமடைந்து, மீண்டும் எனது வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்ப ஆவலுடன் காத்திருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்து, அக்கறையுடன் விசாரிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

விஷால் நடிக்கும் ‘புருஷன்’ படத்தினை இயக்குநர் சுந்தர்.சி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கிறது.

ஆக்சன் கலந்த நகைச்சுவை பின்னணியில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பை விறுவிறுப்பாக முடித்து படத்தை ஜூனில் திரையில் கொண்டுவர படக்குழு முடிவு செய்துள்ளது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் வெளியான மதகஜராஜா, ஆம்பள, ஆக்சன் ஆகிய 3 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Summary

Actor Vishal has stated that he is unable to attend tomorrow's Actors' Association general council meeting due to an injury sustained during shooting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.