தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தைத் திறந்துவைக்கும் முதல்வர் விஜய்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கவிருப்பதாக நடிகர் விஷால் கூறியது குறித்து...

Vishal | Vijay

முதல்வர் விஜய்யுடன் நடிகர் விஷால் - X | Vishal

Published On :

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கவுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணி, நடிகர் சங்க தேர்தல் வழக்கு, கட்டுமானப் பொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. 2024 ஆம் ஆண்டில் கட்டடத்தின் பணிகளுக்காக விஜய்யும் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியிருந்தார். இந்த நிலையில், கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து, நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை விரைவில் திறக்கும் பணியில் நடிகர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் சங்கத்தின் திறப்பு விழா குறித்து நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் கூறியிருப்பதாவது, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. சங்கத்தின் புதிய கட்டடத்தைத் திறப்பது மட்டுமே மீதமுள்ளது.

இந்தப் புதிய கட்டடத்தைத் திறக்கவிருப்பவர் என யார் யாரையோ நாங்கள் நினைத்தோம். ஆனால், இறுதியாக எங்கள் உறுப்பினரே (விஜய்) திறக்கவிருக்கிறார். 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கப்போகும் கட்டடத்தின் கல்வெட்டில் ஜோசப் விஜய் என்றுதான் இருக்கப் போகிறது என்று தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்ட பின்புதான் திருமணம் செய்து கொள்வேன் என நடிகர் விஷால் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Chief Minister Vijay to inaugurate the South Indian Artistes' Association building, says Actor Vishal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.