100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

வேறு யாராக இருந்தாலும் ஓடியிருப்பார்கள்: வருங்கால மனைவி பற்றி விஷால்!

மகுடம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேசியவை.

சாய் தன்ஷிகா - விஷால்

Published On :

மகுடம் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் நடிகர் விஷால் தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவுக்கு நன்றி தெரிவித்தார்.

சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் 'மகுடம்’ படத்தின் மூலம் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஷால் கேங்ஸ்டராக நடித்துள்ளார். மகுடம் திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக, நேற்று டிரைலர் வெளியானது.

டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால் தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார். அதில், “ஒவ்வொரு நடிகனுக்கும் கரியரில் ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும். அந்த நேரத்தில் எல்லோரும் இத்துடன் கரியர் முடிந்துவிட்டது, இனி எழுந்து வரமுடியாது என்று சொல்வார்கள்.

அதுபோன்ற சூழலில் அனைவரும் என் மீது நம்பிக்கை இழந்தனர். கிட்டத்தட்ட 14 மாதங்கள் நடிக்க முடியாமல் நான் வீட்டில் இருந்தேன். அதற்கு காரணமான சில பேர் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.

இந்தத் தருணத்தில் நான் முக்கியமாக ஒருவருக்கு ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். என்னுடைய சுய வாழ்க்கை ரொம்ப பாதிக்கப்பட்ட நேரத்திலும், இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக என் கூட இருந்து, என் கஷ்டங்களில் என்னை ஊக்கப்படுத்தி, உங்கள் அனைவரின் முன்பும் இந்தளவு பாஸிட்டிவாக என்னை நிறுத்தியதற்கு காரணமாக இருந்த எனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவுக்கு மிகவும் நன்றி. வேறு யாராவதாக இருந்தால் இந்நேரம் பிய்த்துக்கொண்டு ஓடியிருப்பார்கள்” என்று தெரிவித்தார்.

சாய் தன்ஷிகா - விஷால் இருவருக்கும் கடந்தாண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. புதிதாகக் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கக் கட்டிடத்தைத் திறந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக விஷால் தெரிவித்திருந்தார்.

Summary

Actor Vishal thanked his future wife, Sai Dhanshika, at the trailer launch event of the movie *Magudam*.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.