‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி: பிரதமர் மோடி உறுதிஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷியா ஆதரவுசெஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம்நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்கள்: என்டிஏ அலுவலகத்துக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்புதமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

முரட்டுத்தனமான அன்பு! இலங்கையில் நடிகர் சூரிக்கு உற்சாக வரவேற்பு!

இலங்கையில் நடிகர் சூரிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது பற்றி...

soori

இலங்கையில் நடிகர் சூரிக்கு உற்சாக வரவேற்பு - X

Published On :

இலங்கை திரையரங்கில் மண்டாடி திரைப்படம் பார்க்க சென்ற நடிகர் சூரிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் மூன்றாவது வாரத்தை கடந்து திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படம் ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவானது.

ஏற்கனவே, ரூ. 125 கோடிக்கும் மேல் வசூலித்த இப்படம் இன்னும் சில நாள்களில் ரூ. 150 கோடியை எட்டலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் மண்டாடி படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், இலங்கைக்கு சென்றிருக்கும் நடிகர் சூரி ரசிகர்களுடன் திரையரங்கில் மண்டாடி திரைப்படம் பார்த்தார்.

அப்போது சாலைகளில் கூடியிருந்த இலங்கை வாழ் தமிழர்கள் சூரிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். காரிலிருந்து வெளியேறிய சூரி, அவர்களின் வரவேற்பை மகிழ்ச்சியுடன் பெற்றார்.

தொடர்ந்து திரையரங்கில் ரசிகர்களுடன் உரையாடிய சூரி, “உலகம் முழுவதும் மண்டாடி படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் ஒவ்வொரு ஊராகச் சென்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். இலங்கையில் மண்டாடி படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் வரிசையில் நிற்பதாக விடியோ பார்த்தேன். இதுமாதிரி சில படங்களுக்கு மட்டுமே வரவேற்பு கிடைக்கும் என்று விநியோகஸ்தர் கூறினார். இலங்கை மக்களின் அன்பு இந்தளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. முரட்டுத்தனமான அன்பாக இருக்கிறது” என்றார்.

Summary

Actor Soori receives an enthusiastic welcome in Sri Lanka!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER