ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

2019 இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

இலங்கையில் 2019-ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பான வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குண்டுவெடிப்பு நடைபெற்ற தேவாலயம் - AP

Published On :

இலங்கையில் 2019-ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பான வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் நாளன்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் கிட்டத்தட்ட 260 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானோரில் 42 பேர் வெளிநாட்டினர்.

ஏப்ரல் 21, 2019 அன்று 3 தேவாலயங்கள் மற்றும் 3 விடுதிகளில் குண்டுவெடிப்புகள் நடைபெற்றன. இலங்கையின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான குண்டுவெடிப்பு சம்பவமான இது, அங்குள்ள இரு இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களால் நடத்தப்பட்டது பின்னர் தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி கடந்த 2021 ஆம் ஆண்டில் 24 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு 23,470 குற்ற வழக்குகள் பதியப்பட்டன. அதில் கொலை, பயங்கரவாதச் சதித்திட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் துப்பாக்கிகள், வெடிபொருள்களைப் பயன்படுத்தியது தொடர்பான குற்றங்களும் அடங்கும். குண்டுவெடிப்பில் நேரடியாக ஈடுபட்ட நபர்கள் யாரும் உயிருடன் இல்லை.

இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய 15 பேரை இலங்கை நீதிமன்றம் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பளித்தது.

குண்டுவெடிப்புகள் தொடர்பாக வெளிநாட்டு உளவுத்துறை அமைப்புகள் தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுத்தபோதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக முன்னாள் காவல்துறைத் தலைவர் மற்றும் முன்னாள் மூத்த பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஆகியோருக்கும் ஜூலை மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 1976 ஆம் ஆண்டு முதல் மரண தண்டனை விதிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, ஆயுள் தண்டனையே வழங்கப்பட்டு வருகின்றது.

Summary

A court has convicted 15 people in the case related to the 2019 bombings in Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.