
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மூத்த இங்கிலாந்து வீரர் விலகல்!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக மூத்த இங்கிலாந்து வீரர் விலகியுள்ளார்.

அடில் ரஷீத் - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக மூத்த இங்கிலாந்து வீரர் விலகியுள்ளார்.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒருநாள் தொடர் இன்று (செப்டம்பர் 22) தொடங்கியது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான அடில் ரஷீத் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.
An update on Adil Rashid pic.twitter.com/uyaSjFa3us
— England Cricket (@englandcricket) September 22, 2026
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து அணியின் பிரதான சுழற்பந்துவீச்சாளராக வலம் வரும் அடில் ரஷீத்துக்கு டி20 தொடரின்போது, வலது கையில் காயம் ஏற்பட்டது. அதனால், அவர் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவர் இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் அடில் ரஷீத்துக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் ரிஹான் அகமது களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
A senior England player has withdrawn from the ODI series against Sri Lanka due to injury.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








