
ஜப்பான் ஆடுகளத்தில் பேட் செய்வது மிகவும் கடினமாக இருந்தது: ஷ்ரேயாஸ் ஐயர்
ஜப்பானின் சனோ சர்வதேச கிரிக்கெட் ஆடுகளத்தில் பேட் செய்வது மிகவும் கடினமாக இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

படம் | பிசிசிஐ
ஜப்பானின் சனோ சர்வதேச கிரிக்கெட் ஆடுகளத்தில் பேட் செய்வது மிகவும் கடினமாக இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
ஆசியப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடுவதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய அணி, ஜப்பானுடன் முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியில் விளையாடியது.
மழை காரணமாக ஓவர்கள் குறைத்து நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஜப்பானின் சனோ சர்வதேச கிரிக்கெட் ஆடுகளத்தில் பேட் செய்வது மிகவும் கடினமாக இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஜப்பான் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. பந்து ஸ்கொயர் ஆக சுழன்று வந்தது. தொடக்க ஆட்டக்காரர்களால் சுழலின் வேகத்தைக் கணிக்க முடியாததை நாங்கள் கவனித்தோம். அதனால், இந்த ஆடுகளத்தில் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் எடுப்பது எளிதாக இருக்கும் என முடிவு செய்தேன்.
புதிதாக பேட்டிங் செய்ய வருபவர்களிடமும் அதனையேக் கூறினேன். ஒரு ரன் மற்றும் இரண்டு ரன்களாக சேர்த்தேன். ஜப்பான் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஆசியப் போட்டிக்கு முன்பாக இந்த ஆடுகளத்தில் விளையாடியது சிறப்பான பயிற்சியாக அமைந்தது என்றார்.
ஜப்பானுக்கு எதிரான இந்த டி20 போட்டியில் இந்திய அணிக்காக அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 16 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian team captain Shreyas Iyer has stated that batting at Japan's Sano International Cricket Ground was very difficult.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








